உள்ளூர் செய்திகள்

என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து விருத்தாசலத்தில் பிரேமலதா ஆர்ப்பாட்டம்

Published On 2023-08-10 07:28 GMT   |   Update On 2023-08-10 07:28 GMT
  • தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

விருத்தாசலம்:

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ. 1000 வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நதி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும். விளை நிலங்களை அழித்து வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனையும் மீறி இன்று விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் வேல்முருகன், நகர செயலாளர் ராஜ்குமார், ஆனந்தகோபால், பிரபா, மாவட்ட இளைஞரணி ஜானகிராமன், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் வசந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினர் புருசோத்தமன், நாராயணன், ராசவன்னியன், சிவகுரு, ராமச்சந்திரன், பாலமுருகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கண்டன கோஷங்களிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News