உள்ளூர் செய்திகள்

கொரட்டூர் பள்ளியில் மாணவனின் கால் முறிவு- பெற்றோருக்கு தெரிவிக்காததால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

Published On 2023-01-14 07:33 GMT   |   Update On 2023-01-14 07:33 GMT
  • வகுப்பறையில் அடிபட்டவுடன் எங்களுக்கு தகவல் தெரிவித்து இருந்தால் நாங்கள் வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருப்போம்.
  • எப்போது அடிபட்டது என்று கூட தெரியவில்லை காலில் லேசான கட்டுடன் கடும் வலியால் அலுவலக அறையில் அமர வைத்திருந்தனர்.

அம்பத்தூர்:

அம்பத்தூர் கள்ளிகுப்பம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் டில்லி பாபு. இவருடைய மகன் யுகன் (வயது 6) கொரட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இவனை, அவனது தாத்தா பாபு தான் பள்ளிக்கு அழைத்துச் சென்று வருவார். நேற்று மாலை பள்ளிக்குச் சென்ற யுவனை காணவில்லை என்று பாபு தேடினார்.

பின்னர் அங்கிருந்த ஆசிரியரிடம் விசாரித்த போது சக மாணவன் ஒருவனால் தள்ளிவிட்டு கீழே விழுந்த யுகனுக்கு காலில் அடிபட்டு பெரிய கட்டுடன் பள்ளியின் அலுவலக அறையில் அமர வைக்கப்பட்டிருந்தான்.

அவனை தூக்கிக் கொண்டு உடனடியாக பாபு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அப்போது தான் சிறுவன் யுகனுக்கு காலில் எலும்பு இரண்டு துண்டாக உடைந்து இருப்பது தெரியவந்தது.

இது தெரியாமல் பள்ளி நிர்வாகம் அருகில் உள்ள மருத்துவமனையில் காலில் சாதாரன கட்டு கட்டி அலுவலகத்தில் உட்கார வைக்கப்பட்டிருந்ததும் வலியால் அவன் துடித்ததும், பெற்றோருக்கு தெரிய வந்தது. பள்ளி நிர்வாகத்திடம் நேற்று இரவு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் கூறும்போது:-

"வகுப்பறையில் அடிபட்டவுடன் எங்களுக்கு தகவல் தெரிவித்து இருந்தால் நாங்கள் வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்திருப்போம். எப்போது அடிபட்டது என்று கூட தெரியவில்லை காலில் லேசான கட்டுடன் கடும் வலியால் அலுவலக அறையில் அமர வைத்திருந்தனர். எங்களைப் பார்த்ததும் கதறி அழுதது நெஞ்சை உருக்குதாக இருந்தது. எனவே அரசு உடனடியாக இந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர் மல்க கூறினர்.

Similar News