உள்ளூர் செய்திகள்

எலி வலைக்குகள் சிக்கிய பாம்பை படத்தில் காணலாம்.

போடி அருகே எலியை பிடிக்க வைத்த கூண்டில் சிக்கிய பாம்பு

Published On 2023-07-18 04:15 GMT   |   Update On 2023-07-18 04:15 GMT
  • எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே பாம்பு நுழைந்தது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர்.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி கீழத்தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புப் பகுதியில் சங்கரன் என்பவரது வீட்டில் சுமார் 4 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு நுழைந்தது.

அங்கே எலியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் எலி ஒன்று சிக்கி இருப்பதைக் கண்டு அதைப் பிடிக்க கூண்டிற்குள் உள்ளே நுழைந்தது. அந்த சமயத்தில் நல்ல பாம்பும் உள்ளே வசமாக சிக்கிக்கொண்டது.

எலி வலைக்குள் இருந்த நல்ல பாம்பு ஆக்ரோஷமாக சீறியதைக் கண்டு சங்கரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூச்சலிட்டனர். பின்னர் அங்கு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர். பின்னர் இது குறித்து போடி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கூண்டுக்குள் சிக்கி இருந்த நல்ல பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து போடி மெட்டு மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News