உள்ளூர் செய்திகள்

திருப்பதி திருக்குடை ஊர்வலம்- தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார்

Published On 2023-09-13 11:15 GMT   |   Update On 2023-09-13 11:15 GMT
  • ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
  • எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அம்பத்தூர்:

அயனாவரம் திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளையும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவம் ஊர்வலத்தில் 21 அழகிய திருக்குடைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று சமர்ப்பிப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருமலை திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் சிறப்பு பூஜைகளுடன் 21 திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பிக்கப்படுகிறது. அதற்காக திருக்குடை ஊர்வலம் இன்று காலை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜை புனஸ்காரங்களுடன் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என்று பக்தர்களின் கரகோஷத்துடன் ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலத்துக்கு மாநில விஷ்வ இந்து பரிஷத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

திருக்குடை சேவா சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி.ராமலிங்கம் வரவேற்றார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அகில பாரத வழக்கறிஞர் பிரிவு சு.சீனிவாசன் முன்னிலை வகிக்தார். திருக்குடை ஊர்வலத்தை அகில பாரத சன்னியாசிகள் சங்க அறங்காவலர் சுவாமி ஈஸ்வரானந்தா ஆசியுரையுடன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் அறங்காவலர்கள் தணிகைவேல், எஸ். சீனிவாசன் உட்பட திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த திருக்குடை ஊர்வலமானது

என்.எஸ்.சி.போஸ் ரோடு, வால்டாக்ஸ் ரோடு, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா ரோடு, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, ஸ்டாரன்ஸ் ரோடு, கொன்னூர் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இன்று இரவு அயனாவரத்தில் உள்ள காசி விசுவநாதர் ஆலயம் சிவசக்தி சத்சங் மண்டபத்தில் தங்குகிறது.

Tags:    

Similar News