தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் உள்ள விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தினமும் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
இதற்கிடையே, தங்களுக்கான பங்குத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என மீன்பிடி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தர்மபிச்சை மற்றும் ஜவகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை கடலுக்கு செல்வதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபடாமல் அவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் தூத்துக்குடி டி.எஸ்.பி.சத்யராஜ் தொலைபேசியில் விசைப்படகு உரிமையாளர்களுடன் பேசி காலையில் சமூக தீர்வு காணப்படும் எனவே உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட மீனவர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இன்று காலை மீன்பிடிக்க செல்லாமல் வேலை கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.