கடையநல்லூர் நகராட்சியில் விரைவில் தாமிரபரணி குடிநீர்- நகர்மன்ற தலைவர் தகவல்
- மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் விரைவாக நிறைவேற்றி வருகிறார்.
- நகராட்சிக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் படி ப்படியாக நிறைவேற்றப்படும்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகி றது. மக்களின் கோரிக்கைகளை தமிழக முதல்வர் விரைவாக நிறை வேற்றி வருகிறார். நமது நகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. நகராட்சிக்கு தேவைப்படும் அனைத்து திட்டங்களும் படி ப்படியாக நிறைவேற்றப்படும்.
நகராட்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து துறை அமைச்சர்கள், கலெக்டர் ஆகாஷ் ஆகியோரிடம் மனு அளித்துள்ளேன். கடையநல்லூரில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடம் அமைத்தல், தினசரி சந்தை நெருக்கடிகளை குறைத்து மேம்படுத்துதல், அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் இட வசதியை மேம்படுத்தி, சுகாதார வசதியை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
தாமிரபரணி குடிநீர்
கோடை காலங்களிலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி தண்ணீரை வழங்க வேண்டும் என பொதுமக்களும், நகர்மன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீரை வழங்குவதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிபரணி குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.