- மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8ஆண்டுகளாக சிவாலய ஓட்டம் நடத்தி வருகிறோம்.
- காசி விஸ்வநாதர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு பெறும்.
பல்லடம் :
பல்லடத்தை சேர்ந்த சிவ பக்தர்கள் கடந்த 8 ஆண்டுகளாக வருடம் தோறும் சிவராத்திரியை முன்னிட்டு, பல்லடம் வட்டாரத்தில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று வரும் வகையில் சிவாலய ஓட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து சிவாலய ஓட்டம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மகிழ்வேல் பாண்டியன் கூறியதாவது:- மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8ஆண்டுகளாக சிவாலய ஓட்டம் நடத்தி வருகிறோம்.
பல்லடம் பட்டேல் வீதியில் உள்ள அருளானந்த ஈஸ்வரர் கோவிலில் இருந்து நடராஜர் சிலை உடன் புறப்பட்டு, கவுண்டம்பாளையம் பரமசிவன் கோவில், பரமசிவம் பாளையம் ஈஸ்வரன் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில்,கரடிவாவி சிவன் கோவில், அய்யம்பாளையம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஆகியவற்றுக்கு சென்று பின்னர் பல்லடம் பொன் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு பெறும்.
ஒவ்வொரு கோவிலிலும் பாராயணம் படித்து சாமி தரிசனம் செய்து புறப்படுவோம். இரவு 9 மணி அளவில் தொடங்கும் சிவாலய ஓட்டம் மறுநாள் காலை 7மணிக்கு நிறைவு பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.