உள்ளூர் செய்திகள் (District)

தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடந்தது.

தமிழகத்தில் கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிப்பு- மேயர் பெருமிதம்

Published On 2022-10-28 10:07 GMT   |   Update On 2022-10-28 10:07 GMT
  • வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.
  • சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு;-

துணை மேயர் அஞ்சுகம் பூபதி: 51-வது வார்டில் சில இடங்களில் காலியாக உள்ள மனைகளில் செடி, கொடிகள் படர்ந்துள்ளது.

இதனால் வீட்டுக்குள் பாம்பு, விஷபூச்சிகள் படையெடுப்பதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்கட்சி தலைவர் மணிகண்டன்: தீபாவளி நேரத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் பகுதியில் ஏராளமான தரைக்கடைகள் அமைக்கப்பட்டன.

இதற்கு மாநகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என கூறியது. அப்போது எப்படி இந்த கடைகள் அமைக்கப்பட்டன.

இதற்கு பதில் அளித்து ஆணையர் சரவணக்குமார் பேசும்போது, வியாபாரிகள் அவர்களாகவே கடை அமைத்தனர்.

இனி வரும் காலங்களில் தீபாவளி நேரத்தில் வியாபாரிகள் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களாகவே தரைக்கடைகள் அமைக்க அனுமதிக்கப்படுவர்.

இதையடுத்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு;-

கவுன்சிலர் கோபால்:

எனது வார்டில் பணிகள் சரிவர நடப்பதில்லை.

உடனடியாக அனைத்து பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு உடனே முடிக்க வேண்டும்.

சரவணன்: சேவப்பநாயக்கன்வாரி 3 தெருவில் சாலை வசதி இல்லாததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

எனவே அதனை தடுக்க நடவடிக்கை எடுப்பதோடு சாலை வசதி அமைத்து தர வேண்டும்.

யு.என்.கேசவன் :

எனது வார்டில் சாலைகள் மோசமாக உள்ளது.

அதனை சீரமைக்க வேண்டும். சாலைகளில் குதிரைகள் தொல்லை அதிகமாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே குதிரைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மழை காலம் தொடங்க உள்ளதால் மழை பெய்யும் நேரத்தில் தண்ணீர் தேங்கினால் அதனை உடனுக்குடன் வெளியேற்ற தேவையான கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

காந்திமதி :

கீழவாசல் வெள்ளைபிள்ளையார் கோவில் அருகே உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

எனவே வேறு இடத்தில் மீன் மார்க்கெட்டுக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும்.

மேலும் இந்த பகுதியில் சாலைகள் பழுதடைந்துள்ளது.

அதனையும் சீரமைக்க வேண்டும்.

ஜெய்சதீஷ் :

எனது வார்டில் பாதாள சாக்கடை ஆழ்துறை குழிக்கான மூடி கண்டுபிடிக்கப்பட்டதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதே நேரத்தில் சில இடங்களில் பாதாள சாக்கடை இணைப்புக்காக தோண்டப்பட்ட இடங்களில் பணி முடிந்தும் சரிவர மூடாப்படாதால் சாலை சேதமடைந்துள்ளது.

அதனை சரி செய்ய வேண்டும்.

ரம்யா சரவணன் :

தஞ்சை மாதவராவ் நகரில் இருந்து அண்ணா நகர் வரையிலான பகுதிகளில் மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும்.

கடன் இல்லாத மாநகராட்சி

கவுன்சிலர்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மேயர் சண்.ராமநாதன் பேசியதாவது;-

தமிழகத்தில் கடன் இல்லாத மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகளை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News