உள்ளூர் செய்திகள்

தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்ற மாணவர்கள்.

தேசிய அளவிலான போட்டிகளில் தங்கபதக்கம் வென்ற பூதலூர் பள்ளி மாணவர்கள்

Published On 2022-06-11 10:07 GMT   |   Update On 2022-06-11 10:07 GMT
  • செஸ் போட்டியில் பூதலூர் பள்ளி மாணவன் சிவராமன் முதல் சுற்றில் பூனாவை சேர்ந்த மாணவருடன் போட்டியிட்டு வென்றார்.
  • இறுதி சுற்றில் மகாராஷ்டிரா மாநில அணியுடன் மோதி 28 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்கப்பதக்கம் மற்றும் அணிக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

பூதலூர்:

பூதலூரில் செயல்பட்டு வரும் புனித ஆரோக்கிய அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் கபடி மட்டும் செஸ் போட்டிகளில் பங்குகொண்டனர்.

14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவுகளில் நடைபெற்ற கபடி மட்டும் செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கபதக்கத்தை வென்றனர். கபடி போட்டியில் கேப்டன் பொன்னிவளவன் தலைமை–யிலான குழுவினரும், செஸ் போட்டியில் சிவராமனும் கலந்து கொண்டனர்.

செஸ் போட்டியில் பூதலூர் பள்ளி மாணவன் சிவராமன் முதல் சுற்றில் பூனாவை சேர்ந்த மாணவருடன் போட்டியிட்டு வென்றார். இறுதிச்சுற்றில் ஹரியானா மாணவருடன் போட்டியிட்டு வெற்றிபெற்று தங்கப்ப–தக்கம் வென்றார். கபாடியில் பொன்னிவளவன் தலைமை–யிலான குழுவினர் முதல் சுற்றில் ஹரியானாவுடன் விளையாடி 23 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றனர்.

இறுதி சுற்றில் மகாராஷ்டிரா மாநில அணியுடன் மோதி 28 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்கப்பதக்கம் மற்றும் அணிக்கு வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் நேற்று மாலை ரயில் மூலம் பூதலூர் வந்தனர். பூதலூர் ரயில் நிலையத்தில் பள்ளி முதல்வர் மரிய ஜோஸ்லின் அமலா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் திரண்டு நின்று வெற்றி வீரர்களை வரவேற்றனர். பேண்ட் வாத்தியம் முழங்க, சரவெடி வெடிக்க வெற்றி பெற்ற மாணவர்களை ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

கபடி பயிற்சியாளர் பிரசாந்த், கபடி கேப்டன் பொன்னிவளவன், செஸ் வெற்றியாளர் சிவராமன் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் சந்தனமாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் வெற்றி திலகமிட்டு பெற்றோர்கள் விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்தினர்.

தமிழ் நாட்டின் பழமையான விளையா–ட்டான கபடியில் தேசிய சாதனை படைத்த கிராமத்து மாணவர்களையும் பயிற்சி அளித்த பயிற்சியா ளர், ஊக்குவித்த பள்ளித்த லைமை ஆசிரியர், உள்ளி ட்டோர்களை விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்தினர்.

Tags:    

Similar News