உள்ளூர் செய்திகள்

பூண்டி மாதா பேராலயம்.

பூண்டி மாதா பேராலய ஆண்டு பெருவிழா 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-05-01 09:20 GMT   |   Update On 2023-05-01 09:20 GMT
  • தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர்பவனி நடைபெறும்.
  • வருகிற 15-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி.

பூதலூர்:

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பூலோகம் போற்றும் பூண்டி மாதா என அழைக்கப்படும் இந்த பேராலயத்தில் ஆண்டு பெருவிழா வருகிற 6-ம்தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பேராலய ஆண்டு திருவிழா தொடக்க நிகழ்வாக கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் 6-ம் தேதி மாலை நடைபெறுகிறது .

பூண்டி அன்னையின் உருவத்துடன் கொடியை பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.

ஊர்வலம் கொடி மேடையை வந்து அடைந்தவுடன் கொடி மரத்தில் அந்தமான் நிகோபார், போர்ட் பிளேர் மறை மாவட்ட பிஷப் விசுவாசம் செல்வராஜ் கொடியை ஏற்றி வைத்து மரியா- ஆறுதலின் அன்னை என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

திருப்பலியில் பேராலய அதிபர் சாம்சன், துணைஅதிபர் ரூபன் அந்தோணி ராஜ் , தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தை அருளானந்தம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கொடியேற்றத்தினை தொடர்ந்து நவநாட்கள் எனப்படும் திருவிழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர பவனியும் அதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் அருள் தந்தையர்களால் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

வரும் 8-ம் தேதி (திங்கட்கிழமை) புதுமை இரவு வழிபாடு கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தை யூஜின் டோனி வழிநடத்து தலில் நடைபெறும்.

பூண்டி மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா நாளான வரும் 14ஆம் தேதி காலை பூண்டி மாதா பேராலயத்தில் பணியாற்றி மறைந்த அருட் தந்தையர்கள் லூர்து சேவியர் மற்றும் ராயப்பர் அடிகளாரின் நினைவு திருப்பலி நிறைவேற்றப்படும்.

மாலை கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியா -அருளின் ஊற்று என்ற தலைப்பில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் மின்விளக்கு களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரில் பூண்டி அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

தொடர்ந்து வாணவே டிக்கை நடைபெறும்.

மே 15ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி கும்பகோணம் ஆயர் அந்தோ னிசாமி நிறைவேற்றுவார்.

மாலையில் கொடி இறக்கத்துடன் பூண்டி திருத்தல பேராலயத்தின் ஆண்டு பெருவிழா நிறைவு பெறுகிறது .

திருவிழா விற்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் அருட்தந்தையர்கள், பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News