உள்ளூர் செய்திகள்

காலில் காயம் அடைந்த குதிரைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர்

Published On 2023-11-26 10:00 GMT   |   Update On 2023-11-26 10:00 GMT
  • நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.
  • தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு வனவிலங்கு சரணாலயத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான், குரங்குகள், மட்ட குதிரைகள் முயல், நரி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரமாக கால்முறிந்த நிலையில் ஒரு ஆண் மட்ட குதிரை ஒன்று கிடந்தது. இதுகுறித்து வனச்சரகர் அலுவலக அயூப்கானுக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து, அந்த குதிரை பிடிக்கப்பட்டு வனத்துறையினர், கால்நடை மருத்துவர் சிவசூரியன் மற்றும் மருத்துவ குழுவினர் குதிரைக்கு சிகிச்சை அளித்தனர். இந்த குதிரைக்கு ஒரு வாரம் சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து மட்ட குதிரைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த குதிரை நேற்று மதியம் திடீரென முனியப்பன் ஏரி அருகே விழுந்து கிடந்தது.

தகவலறிந்த டாக்டர்கள் உடனடியாக குதிரையை மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News