உள்ளூர் செய்திகள்

விபத்தில் ஏர்லாக் ஆனதால் நடுரோட்டில் 3 மணி நேரம் நின்ற மினிவேன்

Published On 2022-09-15 07:31 GMT   |   Update On 2022-09-15 07:31 GMT
  • லாரி திடீர் பிரேக் போட்டதால் மினி வேன் லாரி மீது மோதியது.
  • ஏர்லாக் ஆகி நடுரோட்டில் நின்ற மினி வேனை கிரைன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

கடலூர்:

சென்னை வியாச ர்பாடியை சேர்ந்தவர் இசக்கி பாபு (32). இவர் உளுந்தூர் பேட்டையில் இருந்து சென்னை வியாசர் பாடிக்கு மினி வேனை ஓட்டி சென்றார். திண்டிவனம் வீரங்குளம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரி திடீர் பிரேக் போட்டதால் மினி வேன் லாரி மீது மோதியது. இதனால் ஏர் லாக் ஆகி மினி வேன் நடுரோட்டில் நின்றது. இதனால் 3 மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திண்டிவனம் சப்- இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி, போலீஸ்காரர்கள் வரதராஜ், சுந்தர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

ஏர்லாக் ஆகி நடுரோட்டில் நின்ற மினி வேனை கிரைன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வராததால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது. இந்த விபத்தில் மினி வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Tags:    

Similar News