உள்ளூர் செய்திகள் (District)

அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கும் காட்சி.

கனமழையால் அறுவடைக்கு தயாரான முன்பட்ட குறுவை பயிர்கள் சாய்ந்தன

Published On 2022-08-27 10:26 GMT   |   Update On 2022-08-27 10:26 GMT
  • மாலையில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி தொடர்ந்து மிதமான அளவில் மழை பெய்தது.
  • தொடர்ந்து மழை பெய்தால் அறுவடைக்க தயாரான பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பகலில் வெயில் சுட்ரெித்தாலும் மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.

நேற்று பகலில் வெயில் அடித்தது. மாலையில் குளிர்ந்த காற்று வீசி மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மிதமான அளவில் மழை பெய்தது.

1 மணி நேரம் நீடித்த மழை பினனர் வெறித்தது.

அதன்பின்னர் வானில் இடி முழக்கமிட்டு கொண்டே இருந்தது.

இதேபோல் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருவையாறு ,கும்பகோணம், குருங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை கொட்டியது.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது முன்பட்ட குறுவை நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

தொடர் மழையால் அந்த வகை குறுவை நெற்பயிர்கள் சாய்ந்தன.

தஞ்சை அருகே குருங்களூர்உள்ளிட்ட மாவட்டத்தின் சில இடங்களில் முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் சாயந்துள்ளன.

தொடர்ந்து மழை பெய்தால் அறுவடைக்க தயாரான பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

இன்று பகலில் வெயில் அடித்து வந்தாலும் மாலை, இரவு நேரங்களில் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

வல்லம்-39, குருங்குளம்-47, திருவையாறு-24, கும்பகோணம்-15.40, தஞ்சாவூர்-6.

Tags:    

Similar News