உள்ளூர் செய்திகள்

ராஜகோபுர கலசத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சீர்காழி சட்டைநாதர் கோவில் ராஜகோபுரத்தில் கலசம் வைக்கும் பணி

Published On 2023-05-15 10:02 GMT   |   Update On 2023-05-15 10:02 GMT
  • கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது.
  • நவதானியங்களை கோபுர கலசத்தில் இட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தர்மபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர்க்கு, உமையம்மை ஞானபால் வழங்கிய இத்தலத்தில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோவிலில் உள்ள நான்கு கோபுரங்கள், பிரகாரங்கள், அனைத்து சுவாமி சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும் கருங்கல் சன்னதி மற்றும் கருங்கல் பிரகாரம் அமைக்கப்பட்டும் திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிறது.

இக்கோவிலில் உள்ள ருணம் தீர்த்த விநாயகர் விமானத்தில் தர்மபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருகரத்தால் கோபுர கலசம் வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுர திருப்பணி உபயதாரர் மார்கோனி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்தர்கள் நவதானியங்க ள்கோபுர கலசத்தில் இட்டு கலசத்திற்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் கோபுர கலசங்கள் கிழக்கு ராஜகோபுரத்தில் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News