உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் கோட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை நள்ளிரவில் சாதாரண உடையில் வந்து ஆய்வு செய்த போலீஸ் சூப்பிரண்டு
- விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா கோலாகலமாக கொண்டா டப்பட்டது. விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விநாயகர் சிலை வைப்பதில் பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சா சாங் சாய் நள்ளிரவு 11 மணியளவில் சாதாரண உடையில் வந்து திண்டிவனம் கோட்ட போலீஸ் நிலையங்கள் மற்றும் பல்வேறு போலீஸ் நிலையங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து கோவில் நிர்வாகிகள் மற்றும் போலீசுக்கு அறிவுரை வழங்கினார்.ஊர்வலம் செல்வது குறித்தும் எப்படி விநாயகர் சிலையை நீர் நிலையங்களில் கரைப்பது குறித்தும் எடுத்துக் கூறினார்.