உள்ளூர் செய்திகள்

ஊரையே காலி செய்துவிட்டு திருப்பதி சென்ற கிராம மக்கள்

Published On 2023-03-04 09:32 GMT   |   Update On 2023-03-04 09:32 GMT
  • 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • கையில் கம்பை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்.

காவேரிப்பட்டனம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊரை காலி செய்து விட்டு குடும்பம் குடும்பமாக திருப்பதிக்கு சென்று வருவது வழக்கம். இது அறிவிக்கப்படாத ஊர் கட்டுப்பாடாக இன்று வரை தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிறது. இதையொட்டி இந்தாண்டு கிராம மக்கள் திருப்பதிக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.

இந்த ஆன்மிக பயணத்திற்காக ஒவ்வொரு வீட்டிலும் மஞ்சள் துணி கட்டிய உண்டியல் வைத்தனர். அதில் பொதுமக்கள் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து காணிக்கை போட்டு வைத்தனர். காவல் தெய்வமான ஊர் பூசாரி இந்தநிலையில் அந்த உண்டியலை எடுத்துக் கொண்டு கிராம மக்கள் வீடுகளை பூட்டி விட்டு நேற்று 15 பஸ்களில் ஊரை காலி செய்து விட்டு குடும்பத்துடன் திருப்பதிக்கு புறப்பட்டனர்.

முன்னதாக, அவர்கள் ஊர் தலைவர் மாரியப்பன் தலைமையில், கிராமங்களை சுற்றிலும் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் பஸ்களில் திருப்பதிக்கு சென்றனர்.

ஊரின் வழக்கம்படி ஊர் பூசாரி காவல் தெய்வமாக எல்லையில் கையில் கம்பை வைத்துக் கொண்டு பாதுகாப்புக்காக இருந்து வருகிறார்.

திருப்பதி கோவிலுக்கு சென்ற கிராம மக்கள் வந்தவுடன் சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர் பூசாரிக்கு ஊர் மரியாதை செய்த பின்னர் அவரவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வார்கள். ஊரை காலி செய்து விட்டு பொதுமக்கள் குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் சென்றதால் கிராமமே வெறிச்சோடியது. இதே போல தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,இண்டூர் அருகே உள்ள சோமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிறுகலூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் கோயில் கட்ட முடிவு செய்துள்ளனர்.கோயில் கட்டி முடித்த பின்பு ஊரில் உள்ள அனைவரும் ஆந்திர மாநிலத்தில் திருப்பதி கோயிலுக்கு செல்ல முடிவு செயௌதுள்ளனர்,

ஆனால் ஏதோ காரணத்தால் கோயில் கடௌடும் பணி நின்றுவிட்டது. இந்நிலையில் அக்கிராமத்தை பொது மக்கள் தம் முன்னோர்களின் வேண்டு தலை நிறைவேற்றும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு ஊரில் கோயில் ட்டி கும்பாபிசேம் முடித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் திருப்பதிக்கு செல்ல முடிவு செய்தனர். இதுகுறித்து பேசிய கிராம மக்கள், தமது முன்னோர்கள் திருப்பதியிலுள்ள பெருமாள் கோவிலை போன்று ஒரு கோவிலை தங்களது கிராமத்தில் கட்ட வேண்டும் என்றும், கோவிலை கட்டி முடித்த பிறகே திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசிப்போம் என வேண்டி கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் ஊரே ஒன்று திரண்டு சொந்த செலவில் பெருமாள் கோவிலை கட்டி முடித்து சமீபத்தில் கும்பாபிசேகமும் செய்து முடித்து விட்டோம்.அந்த சந்தோசத்திலும், முன்னோர்களின் வேண்டுதலை நிறைவேற்றிடும் வகையில் 80 வருடங்களுக்கு பிறகு தற்போது ஊரே ஒன்று திரண்டு சுமார் 300 பேர் 5 பேருந்துகளில் திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்து செல்வதாக தெரிவித்தனர்.

கிராம மக்களின் இந்த செயலை அந்தபகுதியை சேர்ந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பேசிக்கொண்டனர்.

Tags:    

Similar News