மழை குறைந்ததால் 120 அடிக்கு கீழ் சரிந்த பெரியாறு அணை நீர்மட்டம்
- கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது.
- மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.
கூடலூர்:
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தாமதமாக தொடங்கியதால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையினால் அணையின் நீர்மட்டம் 115 அடியில் இருந்து 120 அடியாக கிடுகிடுவென உயர்ந்தது.
இதனால் முல்லைபெரியாறு அணை நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதன்பிறகு மழை படிப்படியாக குறைந்து தற்போது முற்றிலும் நின்றுவிட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து குறைந்தது.
நீர்மட்டம்
இன்றுகாலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.95 அடியாக உள்ளது. வரத்து 301 கனஅடி, திறப்பு 400 கனஅடி, இருப்பு 2619 மி.கனஅடி.
வைகை அணையின் நீர்மட்டம் 50.10 அடி, வரத்து 36 கனஅடி, திறப்பு 69 கனஅடி, இருப்பு 2005 மி.கனஅடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 79.31 அடியாகவும் உள்ளது.