உள்ளூர் செய்திகள்
திரையரங்கில் அனுமதி மறுப்பு- மீண்டும் சர்ச்சை
- பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர்.
சென்னை:
சென்னை கல் மண்டபம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு சென்ற பழங்குடியின மக்களுக்கு டிக்கெட் காலியானதாக கூறி, டிக்கெட் வழங்குபவர் அலைக்கழித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தங்களுக்கு டிக்கெட் இல்லையென கூறிவிட்டு, பின்னால் வந்தவர்களுக்கு டிக்கெட் வழங்கியதாகவும் பழங்குடியின மக்கள் கூறினர். பணம் கொடுத்து தானே டிக்கெட் கேட்கிறோம் என கூறிய அவர்கள், டிக்கெட்டை வைத்துகொண்டே இல்லை என கூறிய காரணம் என்ன? என்று வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.
சமீபத்தில் ரோகிணி திரையரங்கிற்கு 'பத்து தல' படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.