தேசிய அளவிலான போட்டியில் தேனி மாணவர்கள் தங்க பதக்கம் வென்று சாதனை
- கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
- தேனியை சேர்ந்த மாணவர்கள் 5 தங்க பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
தேனி:
கோவாவில் கடந்த செப்டம்பர் மாதம் 27,28,29 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் தமிழக அணியின் சார்பாக தேனி அருகே உள்ள ,கொடுவி லார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை மாணவர்கள் அஸ்வின், சர்வேஷ் கோபால், மோகன்தாஸ், மோகித்குமார், வசுநந்தன் ஆகிய வீரர்கள் வயது மற்றும் எடையின் அடி ப்படையில் கலந்து கொண்டு 5 தங்க பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை நிறுவனர் மற்றும் சிலம்ப ஆசான் ஈஸ்வரன் மாண வர்களுக்கு சிறந்த பயிற்சி அளிப்பதோடு, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக வெளி மாநிலங்களில் நடைபெறும் சிலம்பம் போட்டிகளுக்கு அழைத்து சென்று போட்டியில் தங்க பதக்கங்கள் பெறும் அளவிற்கு பயிற்சி கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.