காரைக்காலில் புதுவை அரசு பஸ்கள் குறைந்த அளவுஇயக்கப்படுவதால் பயணிகள் அவதி
- காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 பஸ்கள் உள்ளது.
- தற்போது வெறும் 13 பஸ்கள் மட்டுமே பல்வேறு குறைகளோடு ஓடிகொண்டிருக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்து கழகத்தின் சார்பில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில், சென்னை, கோயம்புத்தூர் திருப்பதி, உள்ளிட்ட வழித்தடங்களில், 100-க்கும் மேற்பட்ட தொலைதூர பஸ்களும், உள்ளூர் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 பஸ்கள் உள்ளது.
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, அண்மையில் பல்வேறு பஸ்கள் புதிதாக வாங்க ப்பட்டு இயக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலிருந்து 15 ஆண்டுகளை கடந்து இயக்கப்பட்ட 22 பஸ்களின் இயக்கத்தை பி.ஆர்.டி.சி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. இதனால் காரைக்கால் மாவட்டத்தில், தற்போது வெறும் 13 பஸ்கள் மட்டுமே பல்வேறு குறைகளோடு ஓடிகொண்டிருக்கிறது.
குறிப்பாக, சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்ப கோணம், திரு.பட்டினம், பூவம், அம்பகரத்தூர், திரு நள்ளாறு, சங்கரன்பந்தல், விழிதியூர் உள்ளிட்ட ஏரா ளமான வழித்தடங்களில் பிஆர்டிசி பஸ் இயங்காமல் முடங்கி இருப்பதால், வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் பஸ்களின் முடக்கம் குறித்து காரணம் தெரியாமல், தினசரி பஸ் வரும் என பஸ் நிலையத்திலும், சாலை யோரங்களிலும் காத்திருந்து ஏமாந்து செல்லும் அவலநிலை உருவாகி யுள்ளது.
எனவே, புதுச்சேரி அரசு நிறுத்தப்பட்ட அனைத்து பஸ்களையும் உடனே இயக்க வழிவகைச் செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவும் புதுச்சேரி போக்குவரத்துறை அமை ச்சராக காரைக்காலை ச்சேர்ந்த அமைச்சார் சந்திர பிரியங்கா இருப்பதால், இதற்கு தார்மீக பொறுப்பெர்று பஸ்களின் இயக்கத்தை விரைந்து கொண்டுவரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.