முருகமலை பரமேஸ்வரன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா
- நெய் மற்றும் உபயதாரர்கள் மூலமாக பெறப்பட்ட எண்ணை ஆகியவை கொண்டு கொப்பரைகளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
- விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி முருகமலை பரமேஸ்வரன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது. தீபத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.சாமிக்கு சிறப்பு அபிசேகம் செய்து பரணி தீபம் ஏற்றப்பட்டது.
மாலை சரியாக 5.55மணிக்கு திருக்கோயில் வழிபாட்டு முறைப்படி சிறப்பு பூஜை செய்து கிராம சூடக்குடம் மற்றும் மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலில் இருந்து பெறப்பட்ட நெய் மற்றும் உபயதாரர்கள் மூலமாக பெறப்பட்ட எண்ணை ஆகியவை கொண்டு கொப்பரைகளில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருக்கோயில் பரம்பரை நிர்வாக அறங்காவலர் அருணாசேகர் செய்திருந்தார். திருவிழாவிற்கான பாதுகாப்பு பணியினை தேவதானப்பட்டி போலீசார் மற்றும் வனச்சரக அதிகாரிகளும் செய்தனர். தேவதானப்பட்டி பேரூராட்சி துப்பரவு மற்றும் சுகாதார பணி செய்தனர்.