திருக்கோவிலூர் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா பள்ளி மாணவர்கள் 99 சதவீதம் தேர்ச்சி
- அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
- முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூரில் ஸ்ரீ லக்ஷ்மி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 157 மாணவர்களில் 156 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தத்தில் இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இங்கு பயின்ற விஷ்வா 600-க்கு 575 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அஸ்வினி, நிஷாந்தி, கீர்த்தனா ஆகிய 3 பேரும் 600-க்கு 562 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடம் பிடித்துள்ளனர். விநாயகமூர்த்தி 552 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்துள்ளார். மாணவர்கள் விஷ்வா, நிஷாந்தி, லோகேஸ்வரி ஆகியோர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், அஸ்வினி இயற்பியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்ணும், பரமேஸ்வரி கணிதம், அறிவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் எடுத்துள்ள னர்.
மேலும், இங்கு பயின்ற 38 மாணவர்கள் 500 மதிப்பெண் களுக்கு மேல் எடுத்துள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் ராஜகோபாலன், செயலாளர் ராஜாசுப்பிரமணியம், முதல்வர் பரணி மற்றும் நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்களும் மாணவ மாணவிகளும் பள்ளியின் சக ஆசிரியர்களும் உடன் இருந்தனர்.