உள்ளூர் செய்திகள்

வந்தவாசி தேனருவி நகரில் அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தல்

Published On 2023-11-18 07:55 GMT   |   Update On 2023-11-18 07:55 GMT
  • சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது
  • கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 23 -வது வார்டில் தேனருவி நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் சாலை, மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த சாலை வழியாக செல்லும் போது கீழே விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதிமக்கள் கூறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News