அரசு மாதிரி மகளிர் பள்ளியில் இலவச சைக்கிள்கள்
- 507 மாணவிகளுக்கு வினியோகம்
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
செய்யாறு:
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் தலைமை தாங்கினார்.
வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் ராஜு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவிக்குமார், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் சின்னதுரை ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமை யாசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 507 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் கே. விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி, நகர மன்ற துணைத் தலைவர் பேபி ராணி, ஒன்றிய செயலாளர் ஞானவேல், தொண்டர் அணி அமைப்பாளர் ராம்ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதே போல் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைமையிலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக் முன்னிலையிலும் ஒ.ஜோதி எம்எல்ஏ 371 மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வழங்கினார்.