ரூ.29 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம்
- அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்தார்
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட மேலபுலம் ஊராட்சியில் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து அதே கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.35.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி, சோளிங்கர் எம்.எல்.ஏ முனிரத்தினம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் அனிதா நாராயணன், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க ஒன்றிய பொருளாளர் பிரகாஷ் மற்றும் ஏராள மான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.