உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-08-18 09:55 GMT   |   Update On 2023-08-18 09:55 GMT
  • புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது
  • பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள பெரிய தெரு சந்திப்பு முதல் கிரிவலப்பாதை அருகில் உள்ள பச்சையம்மன் கோவில் வரை செல்லும் பாதையில் புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் தற்போது திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவில் மாடவீதியில் கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து மாற்றத்தால் நகரில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாக காணப்படுகிறது.

நிலவிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பெரிய தெரு சந்திப்பு முதல் பச்சை யம்மன் ஆலயம் வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் சாலை அமைக்க தேவையான பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

அதன்படி நகராட்சி நிர்வாகம் சார்பில், சாலை அமைக்கும் பணிக்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம்மூலம் அகற்றும் பணி தொடங்கியது.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடிந்ததும், சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News