ஆரணியில் தொழிலாளி கொலையில் வாலிபர் கைது
- டாஸ்மாக் கடை முன் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
ஆரணி:
ஆரணி கொசப்பா ளையம் பெரிய சாயக்கார தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 50). சலவை தொழிலாளி. இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், சுரேஷ்குமார், ஜெயக்குமார் என்ற 2 மகன்களும் உள்ளார்.
பிரகாஷ் மது அருந்தி வருவ தால் அவரை விட்டு மனைவி சரஸ்வதி, மகன் ஜெயக்குமார் சென்னையில் வசித்து வரு கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ஆரணி காந்தி ரோட் டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பிரகாஷ் மதுபானம் வாங்க சென்றதாக கூறப்படு கிறது. அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.
அவரை மகன் சுரேஷ்கு மார் தேடிச்சென்றபோது டாஸ்மாக் கடை முன் பிரகாஷ் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன், உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தார்.பின்னர் பிரேத பரிசோத னைக்காக பிரகாஷ் உடலை திருவண்ணாமலை மருத்து வக் கல்லூரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
உடலில் ரத்தக்காயங்கள் இருப்பதால் அவரை யாரும் கொலை செய்தனரா? போதையில் தடுமாறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் ஆரணி பஜார் பகுதியில் பழவியாபாரம் செய்து வரும் கனகம்பட்டு பகுதியைச் சேர்ந்த முனியாண்டி(வயது 37) என்பவர் பிரகாசை கொலை செய்தது தெரியவந்தது.
மது அருந்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது.
போலீசார் முனியாண்டியை கைது செய்தனர். அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.