கந்து வட்டி கேட்டு மிரட்டல் - நிதி நிறுவன அதிபர் கைது
- வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுள்ளார்
- புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தார்.
மூலனூர் :
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் வட்டம் மூலனூரை அடுத்த எரிசனம்பாளையத்தை சோ்ந்தவா் ஏ.செந்தமிழ்ச்செல்வன் (வயது 22). இவா் பள்ளபட்டியை சோ்ந்த நிதி நிறுவன அதிபரான ராம்குமாரிடம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பாக ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றுள்ளாா்.இதற்காக அசல் மற்றும் வட்டியுடன் சோ்ந்து ரூ.15 ஆயிரம் கட்டியதாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக செந்தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு வந்த ராம்குமாா் மேலும் வட்டி கொடுக்க வேண்டும் என்று தகாத வாா்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்ததுடன், புரோ நோட்டில் ரூ.1 லட்சம் என எழுதி வழக்கு தொடுப்பதாக தெரிவித்தாராம்.
இது குறித்து மூலனூா் போலீஸ் நிலையத்தில் செந்தமிழ்ச்செல்வன் புகாா் அளித்துள்ளாா்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராம்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.