உள்ளூர் செய்திகள்

தமிழர்களுக்கு திருக்குறள் தான் வேதம் பர்வீன் சுல்தானா பேச்சு

Published On 2023-02-01 10:12 GMT   |   Update On 2023-02-01 10:12 GMT
  • எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்க வேண்டும்.
  • தமிழர்களுக்கு திருக்குறள் தான் வேதம். அந்த போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து பாருங்கள்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலன் ஓட்டல் வளாகத்தில் புத்தக கண்காட்சி நடக்கிறது.இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் 'புத்தகம் எனும் போதிமரம்' என்ற தலைப்பில் பர்வீன் சுல்தானா பேசியதாவது:-  இந்த வினாடியை அனுபவிக்க யாருக்கும் தெரிவதில்லை. அனைத்தையும் ஆவணப்படுத்தி வைக்க நினைக்கிறோம்.

நினைவு அலைகளை விட, ஆவண அலைகள் பெரிது கிடையாது. எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளை அனுபவிக்க வேண்டும்.

புத்தகம் வாசிப்பு என்பது ஒரு அற்புதமான கலை. அது ஒரு பொழுதுபோக்கு கிடையாது. புத்தகம் ஒரு மோதிமரம். புத்தகங்களை இளைஞர்கள் மத்தியில் கடத்தும் காலகட்டத்தில் உள்ளோம். மரங்களில் உள்ள ஒவ்வொரு வித்தியாசங்களை போன்று ஒரு புத்தகத்தை வாசிக்க, வாசிக்கத்தான் அதன் அருமையை உணர முடியும்.ஒரு புத்தகத்தை எடுத்தால் முழுமையாக வாசித்து முடிக்க வேண்டும். வெறும் சொல், கருத்து ஏற்றினால் அது மந்திரம். தமிழர்களின் வரலாறு தமிழ் தான். மொழி தான் வரலாறு. தமிழர்களுக்கு திருக்குறள் தான் வேதம். அந்த போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து பாருங்கள். இவ்வாறு அவர் பேசினார் 

Tags:    

Similar News