உள்ளூர் செய்திகள் (District)

திருமங்கலக்குடி மங்களநாயகி அம்மன் கோவிலில் தீர்த்தவாரி

Published On 2023-04-05 10:35 GMT   |   Update On 2023-04-05 10:35 GMT
  • விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.
  • பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி பங்குனி உத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.

கும்பகோணம்:

திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி மங்களநாயகி சமேத பிராணநாத சுவாமி கோயில் பங்குனி உத்திரப் திருவிழா விக்னேஸ் வர பூஜை வாஸ்து சாந்தி போன்ற பூர்வாங்க பூஜைகளுடன் மார்ச் 25-ம் தேதி தொடங்கப்பட்டது. இதைய டுத்து மறுநாள் 26-ம் தேதி சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் செய்து கோயில் கொடி மரத்தில் ரிஷப கொடியேற்றம் நடந்தது.

இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடந்தது. விழாவின் சிறப்பம்சமாக 30-ம் தேதி சகோபுர காட்சியும், , 3-ம் தேதி திருத்தேரோட்டமும் நடந்தது.விழாவின் முக்கிய நாளான நேற்று பங்குனி உத்திர திருவிழா நடை பெற்றது.

இதை ஒட்டி விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண் டிகேஸ்வரர் மற்றும் அஸ்திரதேவர் சகிதமாக பஞ்சமூர்த்தி உற்சவர் சுவாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதி உலா எழுந்தருளினர். காலை 11 மணி அளவில் காவிரி ஆற்றில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி பங்குனி உத்திர தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News