உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலை 9 வது கொண்டை ஊசி வளைவில் சாலை சேதம் அடைந்துள்ள காட்சி.

ஏலகிரி மலை 9-வது கொண்டை ஊசி வளைவில் மணல் கொட்டிய இடத்தில் தார் சாலை அமைக்க வேண்டும்

Published On 2022-09-27 10:20 GMT   |   Update On 2022-09-27 10:21 GMT
  • வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
  • அவ்வப்போது சறுக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுமார் 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்நிலையில் 9-வது கொண்டை ஊசி வளைவில் 2 மாதங்களுக்கும் முன் மழையின் காரணமாக பாலம் சேதம் அடைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சீரமைக்கும் போது பாலத்தின் மேல் மணல் மட்டுமே கொட்டியிருந்தது.

இந்நிலையில் தற்போது மணல் பரவி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்பொழுது அது பரவி வாகன ஓட்டிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், ஆபத்தான சறுக்கும் நிலையில் உள்ளது.

இங்கு அவ்வப்போது சறுக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் இங்கு வளைவான பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு பயணிக்கின்றனர். எனவே சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் பாலத்தின் மேற்பகுதியில் தார் சாலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகளுக்கும், விபத்து ஏற்படாத வண்ணம் தார் சாலை உடனடியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News