உள்ளூர் செய்திகள்

6 லட்சம் திருடிய நபர் நடந்து சென்ற காட்சி.

பைக்கில் ரூ.6 லட்சம் திருடிய கும்பல் கேமராவில் சிக்கினர்

Published On 2023-11-01 07:37 GMT   |   Update On 2023-11-01 07:37 GMT
  • போலீசார் தேடுதல் வேட்டை
  • 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் அடுத்த சொக்கலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் சக்தி (வயது 58) இவர் முன்னாள் ராணுவ வீரர். தற்போது விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் 20 வருட காலமாக சிறுக சிறுக இன்சூரன்ஸ் போட்டு வைத்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முடிவுற்ற நிலையில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு ஜோலார்பேட்டை அருகே ஆசிரியர் நகர் பகுதிக்கு வந்தார்.

அவரை நோட்டமிட்ட மர்ம கும்பல் 4 பேர் பின் தொடர்ந்து வந்துள்ளனர்

சக்தி ஆசிரியர் நகர் நகர் பகுதியில் உள்ள மளிகை கடையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு மளிகை பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுள்ளார்.

அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த 6 லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

ஜோலார்பேட்டை போலிஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் போலீசார் அருகே உள்ள பெயிண்ட் கடையில் உள்ள கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாஸ்க் அணிந்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சாலையில் நடந்து சென்றுதும்.

அருகில் நின்று கொண்டு இருந்த 2 பைக்குகளில் 4 பேர் தப்பி சென்றது பதிவாகி உள்ளது. இதன் மூலம் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News