உள்ளூர் செய்திகள்

அதிகாரி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

எருது விடும் விழா நடைபெறும் இடத்தில் அதிகாரி ஆய்வு

Published On 2023-03-17 10:02 GMT   |   Update On 2023-03-17 10:02 GMT
  • நாட்டறம்பள்ளி ஆத்தூர் குப்பம் கிராமத்தில் வருகிற 24-ந் தேதி நடக்கிறது
  • விதிமுறைகள் குறித்து விழா குழுவினருக்கு அறிவுரை

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அருகே எருது விடும் திருவிழா நடைபெறுவதற்கு மந்தைக்கு கால் நடுவதற்கு வட்டாட்சியர் நேரில் சென்று மண்ணின் உறுதித்தன்மை ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் எருது விடும் திருவிழா வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி எருது விடும் காளை செல்லும் காளைகள் ஓடும் பாதையில் மந்தைகள் கட்டுவதற்காக பூஜைகள் போடப்பட்டது.

அதிகாரி ஆய்வு

இதனையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் குமார் நேரில் சென்று மண்ணின் உறுதித்தன்மை ஆய்வு மேற்கொண்டு காளை விடுவதற்கான விதிமுறைகளை விழா நடத்தும் குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் காளைகளை ஒரே ஒரு முறை மட்டும் தான் விடவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து திருவிழா நடத்துவதற்கு தயாராகி வருகின்றனர் காளை உரிமையாளர்கள் காளை விடும் இடத்தை ஆய்வு மேற்கொண்டு முன் அனுமதி சீட்டு பெற்று வருகின்றனர்.

ஆய்வின்போது வருவாய் அலுவலர் அன்னலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News