வாரச்சந்தை பின்புறம் ரூ.20 லட்சத்தில் சாலை, தடுப்பு வேலி
- முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி தொடங்கி வைத்தார்.
- சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது. சோலார் மின் விளக்கு அமைக்கப்படுகிறது.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் பின்புறம் ஜின்னா சாலை முதல் இக்பால் சாலை வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை மற்றும் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில் தடுப்பு வேலி, சோலார் மின் விளக்குகள் ஆகியவற்றை அமைக்கும் பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோ.செந்தில்குமார் எம்எல்ஏ தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்க இருக்கும் ரூ.20 லட்சம் மதிப்பிலான பணிகளை பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாமராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, செல்வராஜ், உதயேந்திரம் பேரூராட்சி கழக செயலாளர் சரவணன், ஆலங்காயம் பேரூர் கழக செயலாளர் சிவக்குமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் டி.பாண்டியன், ஆலங்காயம் பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் கந்தன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி, அம்மா பேரவை சதீஷ்குமார், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் எம்.ஜி என்கின்ற ஜெய்சங்கர், ஜாப்ராபாத் ஊராட்சி மன்ற உறுப்பினர் சையத் சபியுல்லா, ரபீக் அஹமத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.