சர்வீஸ் சாலையில் 6 நாட்களாக நிற்கும் லாரி
- போக்குவரத்து நெரிசலால் பொது மக்கள் அவதி
- அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுவதாக புகார்
ஜோலார்பேட்டை:
ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு காற்றாலை ஏற்றிக்கொண்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று வந்தது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளி தண்ணீர் பந்தல் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.
போக்குவரத்துக்கு இடை யூறாக, காற்றாலையுடன் லாரி நிற்ப்பதால், அங்கு அடிக்கடி வாகனங்கள் விபத்து ஏற்படுகிறது.
சில சமயங்களில் சர்வீஸ் சாலை வழியாக லாரி உள்ளிட்ட வாகனங்கள் வரும்போது, கடந்த செல்ல வழி இல்லாமல் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
இது குறித்து காற்றாலை ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் விசாரித்த போது, கர்நாடக மாநிலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய இடத்தில் சாலை பணிகள் நடை பெறுவதால் எங்களால் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறோம்.
சாலை சீரமைக்கப்பட்ட பிறகு தான் எங்களுக்கு அனுமதி கிடைக்கும். இதனால் வேறு வழியின்றி இதே இடத்தில் நிற்க வேண்டிய சூழல் உள்ளது என்றார். எனவே அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் நிற்க்கும் லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.