தாசில்தார் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
- குடிநீர் பம்பில் தண்ணீர் விடாமல் தடுப்பதாக புகார்
- சமரச பேச்சு வார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களா மேடு பகுதியில் சுமார் 20 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குடிநீர் பம்ப் போடப்பட்டது.
அந்த குடிநீர் பம்பை அதே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக பொதுமக்களின் பயன்பாட்டிற்காக போடப்பட்ட குடிநீர் பம்பை பயன்படுத்திக் கொண்டு வேறு யாருக்கும் அந்த குடிநீர் பம்பில் தண்ணீர் விடாமல் சொந்தம் கொண்டாடி வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் நேற்று ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்க ளுடன் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலு வகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் முற்றுகையில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்பகுதி பொது மக்களுக்கு அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க படும் என கூறி சமரச பேச்சு வார்த்தை ஈடுபட்டதின் பேரில் அங்கிருந்து பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.