கந்திலி அருகே கோவில் திருவிழாவில் வாலிபர் படுகொலை
- குடும்பத்தை அழிக்க நினைத்ததால் அண்ணனை தீர்த்து கட்டினேன்
- வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த நரியனேரி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகன் யுவராஜ் (வயது 30) 2-வது மனைவி மகன் அஜித் (24 )இவர்களுக்கு இடையே நிலத் தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் யுவராஜ் கலந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அஜித் மற்றும் 2 பேர் சேர்ந்து யுவராஜை கத்தியால் குத்தினர். தப்பி ஓடிய யுவராஜை அவர்கள் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
கந்திலி போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் செவ்வாத்தூர் பகுதியில் பதுங்கி இருந்த அஜித், சேட்டு மகன் நரசிம்மன் (30) உறவினர் அன்பழகன் (42) ஆகியோரை கைது செய்தனர். 3 பேரையும் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
இதுகுறித்து அஜித் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;
எங்கள் குடும்பத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. எங்களுடைய வீட்டை டெட்டனேட்டர் வைத்து குடும்பத்தினரை கொல்ல முயற்சி செய்தனர்.
மேலும் யுவராஜ் எங்களது குடும்பத்தை ஒட்டுமொத்தமாக கொல்ல திட்டமிட்டது தெரியவந்தது. எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். நேற்று உன்னிடம் திருவிழா நிகழ்ச்சி நடந்த போது யுவராஜிக்கு பின்புறமாக சென்று கத்தியால் குத்தி கொலை செய்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.