திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்
- மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஏதுவாக முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது.
- காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை முகாம்கள் நடைபெறுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி க்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் உள்ள அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாக பொதும க்களிடம் இருந்து விண்ண ப்பங்கள் பெறுவதற்கு ஏதுவாக முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. அதன்படி வருகிற 10&ந் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் முகாம்கள் நடைபெறுகிறது. அதன்படி 1, 9 முதல் 15, 21 முதல் 27 ஆகிய வார்டுகளுக்கு திருப்பூர் சிறுபூலுவப்பட்டி ரோடு அம்மன் கலையரங்கத்திலும், 2 முதல் 8, 16 முதல் 20, 30 முதல் 32 ஆகிய வார்டுகளுக்கு பூலுவப்பட்டி நால்ரோடு சவுடாம்பிகைநகர் வி.எஸ். திருமண மண்டபத்திலும், 33 முதல் 35, 44 முதல் 51, 56, 58 முதல் 60 ஆகிய வார்டுகளுக்கு காங்கேயம் மெயின்ரோடு, பள்ளக்காட்டுப்புதூர் சோளியம்மன் கோவில் நற்பணி மன்றத்திலும், 28, 29, 36 முதல் 43, 52 முதல் 55, 57 ஆகிய வார்டுகளுக்கு மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.நகர் ரத்தின விநாயகர் கோவில் மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறுகிறது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் பத்திரம் நகல், மூலபத்திரம் (2016&க்கு முன்) நகல், பட்டா, சிட்டா நகல், மனைப்பிரிவு வரைபடம் நகல், வில்லங்க சான்று நகல், ஆதார் கார்டு நகல் ஆகியவற்றுடன் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நடைபெறும் முகாம்களுக்கு சென்று தங்கள் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக்கொ ள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.