புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம்.
- ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
திருப்பூர்:
புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-
திமுக.வின் தோ்தல் அறிக்கையின்படி மகளிா் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். அதேவேளையில், புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருப்பூா் போன்ற தொழில் நகரங்களில் பல்வேறு தொழில்கள், தூய்மைப்பணியில் ஒப்பந்த முறையில் குறைந்த ஊதியத்தில் புலம்பெயா்ந்த பெண் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
எனவே, புலம் பெயா்ந்த பெண் தொழிலாளா்களுக்கும் மகளிா் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.