திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க ரூ.10 லட்சம் நிதி உதவி -அமைச்சர்களிடம் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்
- பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
- திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது.
திருப்பூர் :
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.90 கோடியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் இருந்து நிதி உதவி பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சேவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., திருப்பூரில் புற்றுநோய் சிகிச்சை மையம் தொடங்குவதற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோரிடம் வழங்கினார். தி.மு.க. மாவட்ட நிர்வாகி திலகராஜ் உடனிருந்தார்.
விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ், மேயர் தினேஷ்குமார், சுப்பராயன் எம்.பி., புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் முருகநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.