உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை படத்தில் காணலாம்.

உடுமலையில் தடை செய்யப்பட்ட 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Published On 2022-09-04 07:52 GMT   |   Update On 2022-09-04 07:52 GMT
  • 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
  • அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உடுமலை :

பிளாஸ்டிக் பயன்பாட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு, நீர்நிலைகளில் தேங்கி பாதிப்பு என சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளாக அதிகளவு வெளியேற்றப்பட்ட கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கவர்கள், பேப்பர் பிளேட், டம்ளர், கப், விரிப்பு உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.ஆனால் அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

உடுமலை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்த போது கோவையிலிருந்து பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டு கடைகளுக்கு இறக்கி விற்பனை செய்யப்பட்டு வந்தது.அவற்றை கண்காணித்து சத்திரம் வீதி, பைபாஸ் ரோட்டிலுள்ள மளிகை கடைகளில் இருந்து 105 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.வந்த வாகனத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், பைபாஸ் ரோட்டிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 7 கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் என 35 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News