உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஒட்டுரக கத்தரி சாகுபடியில் 2மடங்கு மகசூல்

Published On 2022-07-26 08:40 GMT   |   Update On 2022-07-26 08:40 GMT
  • வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
  • முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

பல்லடம் :

பல்லடம் அடுத்த கேத்தனூரை சேர்ந்தவர் பழனிசாமி, (வயது 82). இயற்கை விவசாயி. காய்கறிகள் மட்டுமன்றி, கொடி பந்தல் முறையில் விவசாயம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகசூலை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பழனிசாமி கூறுகையில், இன்றைய சூழலில் விளைபொருட்களுக்கு விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் புலம்பி வருகின்றனர். கூடுதல் மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும் என்பதால், வேளாண் பல்கலைக்கழகம் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.இதன்படி சுண்டைக்காய் செடியுடன் கத்தரி செடியை இணைத்து ஒட்டுரக செடியை வேளாண் பல்கலை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்கள் முன் இது குறித்த ஆய்வுக்காக, அரை ஏக்கரில் ஒட்டுரக கத்தரி சாகுபடி செய்யப்பட்டது.இந்த முயற்சியில் வழக்கத்தை காட்டிலும் இரண்டு மடங்கு மகசூல் கிடைத்தது.

தற்போது இரண்டாம் கட்ட ஆய்வு பணிக்காக மீண்டும் கத்தரி சாகுபடி செய்துள்ளேன். இந்த முயற்சி வெற்றி பெற்றால் விவசாயிகள் கூடுதல் மகசூல் உடன் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என்றார்.

Tags:    

Similar News