திருப்பூா் மாவட்டத்தில் கெட்டுப்போன உணவுகளை வைத்திருந்த 27 கடைகளுக்கு அபராதம்
- உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 145 கடைகளில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனா்.
- 27 கடைகளுக்கு ரூ. 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிக்கை தலைமையிலான அதிகாரிகள், மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் என மொத்தம் 145 கடைகளில் கடந்த 5 நாட்களாக ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, குளிா்சாதனப் பெட்டிகளில் இருப்புவைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன கோழி இறைச்சி, தேங்காய் சட்னி, தயிா், மயோனிஷ், மோமோஸ் மற்றும் காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.இது தொடா்பாக 27 கடைகளுக்கு ரூ. 43 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் தொடா்ந்து நடைபெறும் என்றும், திருப்பூா் மாவட்டத்தில் உணவுப் பொருள்கள் தரம் குறித்து 94440-42322 என்ற கைப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.