உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 39 மருத்துவ குழுவினர் தீவிர சோதனை
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
- 13 ஊராட்சி ஒன்றியங்களில் மருத்துவ குழுவினர் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் :
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் 39 மருத்துவ குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் முகாம் நடத்தி வருகிறார்கள்.
இதுவரை மாவட்டத்தில் பெரிய அளவில் டெங்கு பாதிப்பு இல்லை. ஒருசிலர் மட்டுமே பாதிப்புக்குள்ளாகி அவர்கள் குணமடைந்து விட்டனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத்துறையினர் தீவிர காய்ச்சல் கண்டறியும் முகாம்களை மேற்கொண்டு வருவதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.