உள்ளூர் செய்திகள்
சொத்துவரியில் 5 சதவீதம் தள்ளுபடி வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் அறிவிப்பு
- ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும்.
- இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது 2023- 2024ம் நிதியாண்டிற்கான, சொத்து வரியை இந்த மாதம் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படும், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.