உள்ளூர் செய்திகள்

நாய்கடித்து இறந்துள்ள ஆடுகளை படத்தில் காணலாம்.

வெள்ளகோவிலில் நாய்கள் கடித்து 8 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

Published On 2022-07-07 05:40 GMT   |   Update On 2022-07-07 05:40 GMT
  • கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
  • ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான்வலசு என்ற பகுதியில் கனகராஜ் ( வயது 65) என்பவர் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார்.நேற்று முன்தினம் 5 ந்தேதி இரவு வழக்கம்போல் ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார். மீண்டும் காலையில் சென்று பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்தன. 2 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன, அதன் பின் விசாரித்த போது நாய்கள் வாயில் ரத்த கரையுடன் சுற்றிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய் கடித்துள்ளது. அதேபோல் பக்கத்து தோட்டத்திலும் நாய்கள் ஆடுகளை கடித்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்துபாளையம், கச்சேரி வலசு, சேனாபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாய்கடித்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன, ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News