திருப்பூா் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ.83.75 லட்சம் கடன் உதவி
- கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.
- துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவரும், எம்.பி.யுமான கே.சுப்பராயன் தலைமை வகித்தாா்.
இதில், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகத் துறை, பள்ளி கல்வித் துறை, கனிமவளத் துறை, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடா்பாக துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அவா் வழங்கினாா். கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், கோவை எம்.பி., பி.ஆா்.நடராஜன், ஈரோடு எம்.பி., கணேசமூா்த்தி, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், மாநகராட்சி மேயா் தினேஷ்குமாா், துணை மேயா் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.