உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 200 ஆண்டு பழமைவாய்ந்த மைல்கல் கண்டெடுப்பு

Published On 2022-08-29 07:32 GMT   |   Update On 2022-08-29 07:32 GMT
  • தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்டன.
  • மைல் கற்கள் நடவு செய்யும் மரபு இருந்து வருகிறது.

அவிநாசி :

திருப்பூர் அருகே 200 ஆண்டு பழமைவாய்ந்த தமிழ் எழுத்துகள் மற்றும் எண்கள் அடங்கிய மைல்கல், சாலையோரம் படிகட்டு கல்லாக பயன்படுத்தப்படுகிறது.கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் செய்ய பல இடங்களுக்கு செல்லும் வணிகர்கள் தங்குவதற்காக ஆங்காங்கே மடங்களும், அவர்கள் செல்லுமிடம் அறிந்துகொள்ள மைல் கற்களும் வைக்கப்பட்டிருந்தன.

மைல் கற்களில் தூரங்களை குறிப்பிட தமிழ் எழுத்துகளை ஒத்து காணப்படும் தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த கற்கள் இன்றும் பல இடங்களில் மண்ணோடு மண்ணாக கேட்பாரற்று கிடக்கின்றன.திருப்பூர், வீரராஜேந்திரன் தொல்லியல் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் கூறியதாவது:-

பண்டைய காலங்களில், பெருவழியில் பயணம் செய்யும் மக்களுக்காக மைல் கற்கள் நடவு செய்யும் மரபு இருந்து வருகிறது. திருப்பூர் திருமுருகன்பூண்டியில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப்பணி நடக்கும் இடத்தையொட்டி, சாலையோர நடைபாதை மீது ஏற எளிதாக படிக்கட்டுக் கல்லாக 200 ஆண்டு பழமைவாய்ந்த மைல்கல் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த மைல் கல் 80 செ.மீ., உயரம், 45 செ.மீ., அகலத்தில் உள்ளது. இதில் அவிநாசி, காங்கயம், பல்லடம் ஆகிய இடங்களுக்கு செல்லும் தொலைவு, தமிழ் எண்களால் பொறிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கூட மைல் கல்லில் தமிழ் எழுத்துகள், எண்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு வாய்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News