உள்ளூர் செய்திகள்
மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சினால் ரூ.10ஆயிரம் அபராதம் - உடுமலை நகராட்சி எச்சரிக்கை
- குடிநீரை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும்.
- பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி இருந்தால் இரண்டு நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.
உடுமலை :
உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளதாலும் திருமூர்த்தி மலையில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதாலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் பொருத்தி இருந்தால் இரண்டு நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.