உள்ளூர் செய்திகள்
திறந்தவெளியில் அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம் - சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் அறிவிப்பு
- பொதுமக்கள் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
மங்கலம் :
சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் பொதுக்கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்தாமல் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் ரூ.100 மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.